இலங்கைக்கு எதிராக அமெரிக்காவில் தயாராகும் பிரேரணை!
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து அமெரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ தமிழ் மக்களுடன் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில் அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு சென்று முன்னாள் போராளிகளை சந்தித்திருந்தார்.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பு
தூதுவருக்குரிய நடவடிக்கைகக்கு அப்பால் சென்று இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக இலங்கையின் பாதுகாப்பு தரப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
இந்நிலையில், இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சிலர் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.
இவ்வாறான ஒரு பின்னணியில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் அமெரிக்கர்களின் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் குழு மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவையே இதற்கான அழுத்தத்தினை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |