முன்னாள் கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்
கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான 94 வயது ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்க நீதித் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1996-ஆம் ஆண்டில் 'பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ' (Brothers to the Rescue) என்ற மனிதாபிமான அமைப்புக்குச் சொந்தமான விமானங்களை கியூபா சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்கா திட்டம்
இந்தத் திட்டத்திற்கு அமெரிக்காவின் கிராண்ட் ஜூரி (Grand Jury) ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கியூபாவின் தற்போதைய கம்யூனிச அரசை ஊழல் நிறைந்த மற்றும் திறமையற்றது என்று விமர்சித்து வருவதுடன், அந்த ஆட்சியை மாற்றவும் முயற்சித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கியூபா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும், எரிபொருள் விநியோகத் தடையையும் அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் கியூபாவில் கடுமையான மின் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
எரிபொருள் தடை
இதற்கிடையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் (CIA) தலைவர் ஜோன் ராட்க்ளிஃப் கியூபா அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளதை கியூபா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

கியூபா தனது கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களைச் செய்தால் மட்டுமே பொருளாதாரப் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக இருப்பதாக ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தடை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam