ரஷ்ய விமானம் தடுத்த நிறுத்தப்பட்ட பின்னணியில் அமெரிக்கா! உண்மையை வெளிப்படுத்தியுள்ள ராஜபக்ச உறவினர்
ரஷ்ய விமானம் இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னணியில் அமெரிக்க ஆதரவு அரசாங்கம் செயற்படுவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உயிரை காப்பாற்ற தலைமறைவாகியுள்ள முக்கிய நபர்
ரஷ்யாவில் உள்ள புடினுக்கும் நமது புடினுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு நன்றாக தெரியும். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ரஷ்ய விமானங்களை தான் இறக்குமதி செய்ததாகவும், தன்னைத் தாக்கும் நோக்கில் கோட்டாபயவின் சகோதரர் ஒட்டுமொத்த சுற்றுலாத் துறையையும் அழித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்ய விமானத்தை கட்டுநாயக்காவில் தடுத்தி நிறுத்தியது ஒரு சதி என்றும், இதன் பின்னணியில் அமெரிக்க ஆதரவு அரசாங்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் தான் ரஷ்ய சுற்றுலா பயணிகளை அழைத்து வந்தேன்.கோட்டா ஐயா என்னை தாக்கி சுற்றுலாத்துறையை அழிக்க நினைக்கின்றார் என்றும்,அண்ணனை கவனிக்காதவர் அத்தையின் மகனை என்ன செய்வார் என்று சொல்ல முடியாமல் இன்று தன் உயிரை காப்பாற்ற தலைமறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.