ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்தால் அமெரிக்கா எதிர்க்கும்! ரணில் கூறியதாக கூறும் விமல்(Live)
அமெரிக்கா கோபிக்கும்
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால், அமெரிக்காவிடம் இருந்து எதிர்ப்பை சந்திக்கவேண்டியிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்றபோதும், ஏன் அதனை மேற்கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்றைய அமர்வின்போது எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கஞ்சன விஜயசேகர, குறைந்த விலையி்ல் எரிபொருளை தருவதாக ரஷ்யாவிடம் இருந்து எவ்வித பதில்களை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த விமல் வீரவன்ச, அமைச்சர் இந்த பதிலை கூறுகின்றபோதும், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால், அமெரிக்கா எதிர்ப்பை காட்டும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியதாக குறிப்பிட்டார்.
ரணிலின் நண்பன் அமெரிக்கா
எனினும் இதற்கு பதிலளித்த தாம், அமெரிக்காவின் நெருங்கிய நண்பரான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பதை சுட்டிக்காட்டியதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதேவேளை தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் என்பன ரஷ்யாவுடன் எரிபொருள் கொள்வனவு உடன்படிக்கைகளை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.