உயிரிழந்த ஐந்தாவது ராணுவ வீரரின் பெயரை உறுதிப்படுத்திய அமெரிக்கா
போரின் தொடக்க நாட்களில் குவைத்தில் ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஐந்தாவது அமெரிக்க ராணுவ வீரரின் பெயரை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர், ஐவா மாநிலம் வாக்கீ (Waukee) பகுதியைச் சேர்ந்த மேஜர் ஜெஃப்ரி ஓ’ப்ரியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தின் விளிம்பில் மத்திய கிழக்கு! எதிரிகளின் தீமையை தடுக்கும் வரை நிறுத்த மாட்டோம் .. ஈரானின் பகிரங்க அறிவிப்பு
ராணுவ வீரரின் பெயர்
அவர் 2012ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரிசர்வில் சிக்னல் கோர்ப்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு குவைத்திற்கு பணிநியமனம் செய்யப்பட்டிருந்ததாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மனிதர் இல்லா விமான அமைப்பு” (Unmanned Aircraft System) ஒன்று வான்வழி பாதுகாப்பை தாண்டி, குவைத்தில் உள்ள போர்ட் ஷுவைபா (Port Shuaiba) பகுதியில் அமைந்திருந்த கட்டளை மையத்தை தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
மூன்று அமெரிக்க படையினர்
தொடக்கத்தில், இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், திங்கள்கிழமை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, காயமடைந்த ஒருவரின் உயிரிழப்பு மற்றும் இடிபாடுகளில் மேலும் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
உணவில் விஷம் வைத்து சுரேஷ் சலேவை கொல்ல போடப்பட்ட இரகசிய திட்டம்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
ஈரான் தொடர்பு கப்பல்களைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டம்: அடுத்த கட்டத்திற்கு நகரும் மோதல் News Lankasri
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri