அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தோல்வி: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பதவி நீக்கப்படுவாரா
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி படுதோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸ் மாஸி (Thomas Massie), ஹெக்செத் பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், அவர் மீது ஏற்கனவே எட்டு குற்றச்சாட்டுகளுடன் பதவி நீக்கத் தீர்மானம் ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா–இஸ்ரேல் போரில் ஹெக்செத் முக்கியப் பங்காற்றியதாகவும், போரைத் தொடங்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஊக்குவித்ததாகவும் குடியரசுக் கட்சியினர் உள்ளிட்ட விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசியல் வாழ்க்கை
இந்த நிலையில், செனட்டர் தோம்ஸ் டில்லிஸ், ஹெக்செத்தின் நியமனத்திற்கு ஆதரவளித்தது தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் எனத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே அழுத்தம் அதிகரித்துள்ளது. எனினும்,ஹெக்செத்தைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்கவில்லை என்றும், அவர் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பதவி நீக்கம் சாத்தியமா? அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற சாதாரண பெரும்பான்மை போதுமானது.
தற்போதைய நிலையில் ஜனநாயகக் கட்சிக்கு சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படலாம். ஆனால் செனட்டில் (Senate) பதவி நீக்கம் உறுதியாக வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 67 வாக்குகள் அவசியம்.
பொருளாதார நெருக்கடி
புதிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சிக்கு அதிகபட்சம் 56 இடங்களே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குறைந்தது 11 குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

அரசியல் தாக்கம் ஈரான் போர் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவையும் பொருளாதார நெருக்கடியையும் அதிகரித்ததே குடியரசுக் கட்சியின் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதனால் ஹெக்செத்தின் பதவிக்கு மட்டுமல்லாமல், ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியினர் தங்களைப் போருக்கு எதிரானவர்களாக முன்னிறுத்த முயற்சிக்கலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹெக்செத் மீதான பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், ஈரான் போர் தொடர்பான அரசியல் அழுத்தம் காரணமாக அவரது பதவி எதிர்காலத்தில் கேள்விக்குறியாகியுள்ளது.