அமெரிக்காவினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கடல் கண்காணிப்பு விமானம்
அமெரிக்காவினால் இலங்கையின் விமானப்படைக்கு பரிசாக வழங்கப்பட்ட பீச்கிராப்ட் கிங் ஏர் 360ER விமானம், இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், இதனை கையளித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகோந்த மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ச ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்தநிலையில், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை வலுப்படுத்துவதில், இன்று விமானம் வழங்கப்பட்டமையானது, ஒரு முக்கிய செயற்பாடு என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today, it was an honor to hand over the King Air aircraft to @AirForceLK with @USPacificFleet Admiral Koehler, representing our partnership as we tackle maritime challenges together, enhancing our collective efforts for regional stability in the Indo-Pacific. It is my hope that… pic.twitter.com/vHuppHvxao
— Ambassador Julie Chung (@USAmbSL) October 10, 2024
அதிநவீன கண்காணிப்பு
அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய கிங் எயார், இலங்கையின் கடற்பரப்பில் கண்காணிப்பு, கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியப் பெருங்கடலில் முக்கியமான வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இந்த விமானத்தை இயக்குவதற்கு இலங்கை விமானப்படை வீரர்கள் கன்சாஸ் மற்றும் புளோரிடாவில் சிறப்பு பயிற்சி பெற்றனர்.
அத்துடன் மேலும் அடுத்த மூன்று மாதங்களில் அமெரிக்க அரச அதிகாரிகளால் மேலதிக பயிற்சிகளும் நடத்தப்படவுள்ளன.
King Air 360ER 360நுசு ரக விமானமானது, திருகோணமலை சீனக்குடாவில் உள்ள கடல்சார் கண்காணிப்பு படை 3 இல் இணைவதற்கு முன்னர் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இறுதித் தயாரிப்புகளை மேற்கொள்ளும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |