வடக்கு - கிழக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள அநுரவின் மேலெழுச்சி
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதான கருத்துக்கள் பரவலாக பேசப்படுகிறது.
இந்த பேச்சுக்கள் சிறுபான்மையினரிடத்திலும் வியாபித்துள்ளது.
இலங்கை அரசியலமைப்பை பொறுத்தமட்டில் சிறுபான்மையினரின் வாக்குப்பலம் என்பது ஒவொரு அரசாங்கத்திற்கும் சாதகத்தை ஏற்படுத்திய வரலாறுகளை கொண்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுதேர்தலிலும், ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய மாற்றத்திக்கான ஆணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் சிறுபான்மையினரிடத்திலும் தொடரும் என அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன.
அந்த வகையில் அநுரவுக்கு மக்கள் வழங்கிய மாற்றத்திற்கான களம் மற்றும், எழுச்சி போன்ற ஒரு புதிய அரசியல் நகர்வு நடைபெறவுள்ள பொதுதேர்தலிலும் வடக்கு - கிழக்கு அரசியலிலும் தொடரும் என தொழிலதிபர் துமிலன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
இது தற்போதுள்ள நடைமுறை அரசியலுக்கு பாரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை விளக்கப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் அரசியல் நடைமுறை எவ்வாறு பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகியது என்பதினையும் அவர் இந்த நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில், நடைமுறை அரசியலில் இலங்கை பொருளாதாரத்தின் நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனவும், முதலீடுகளின் முக்கியத்துவம் இலங்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பதினையும், தொடரும் காணொளியில் தொழிலதிபர் துமிலன் விளக்கியுள்ளார்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |