தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தான செய்தி கூறிய சம்பந்தன் மரண வீடு
தமிழரசுக்கட்சியினை பொறுத்தமட்டில் யாழ் மாவட்டத்தின் முக்கிய புள்ளிகள் பலர் சுயேட்சையாக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளமை வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், யாழ் மாவட்டத்தில் களமிறங்கும் வேட்பாளர்களில் மக்களால் நன்கு அறியப்பட்ட சிறீதரன், சுமந்திரன் ஆகிய இருவரும் அதிக வாக்குகளை பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் சிறீதரனை தவிர்ந்த ஏனைய 9 வேட்பாளர்களும் தங்களது விருப்பு வாக்குகளை சுமந்திரனுக்கு வழங்குமாறு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன்மூலம் சுமந்திரன் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தனின் மரண வீட்டிற்கு வந்த மக்களின் எண்ணிக்கையை வைத்து வாக்குகளை கணக்கிட முடியுமென்றும், இது தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தான செய்தி என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (thepakaran) விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |