அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையை சிதைத்த முக்கிய தொலைபேசியின் இரகசியம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ்க்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தடுமாற்றம் ஏற்பட்டதாகவும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஜே.டி. வேன்ஸ், இஸ்ரேல் தொடர்பான முடிவுகளையும் அங்குள்ள நிலைப்பாடுகளையும் முன்னிறுத்தி பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இஸ்ரேல் சார்பாக நெருக்கமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால், இதன்போது சந்தேகங்களும் எழுந்துள்ளன.
மேலும், பேச்சுவார்த்தையின் நடுவே ஜே.டி. வேன்ஸ்க்கு வந்த அந்த அழைப்பு நெதன்யாகுவிடமிருந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவரது வாதங்கள் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன், அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மேசையில் என்னென்ன நிகழ்ந்தது, ஏன் அது தோல்வியில் முடிந்தது என்பதையும் “கழுகு பார்வை” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது,