மின்கம்பத்துடன் மோதி கோர விபத்து: 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (12.04.2026) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த உயர் தர வாகனம் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றுடன் மோதி, அதனை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த கற்கள் மூன்றையும் உடைத்துக்கொண்டு மின்கம்பத்தில் மோதி பின்னர் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 7 பேரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
