நள்ளிரவில் ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் - பராமரிப்பு தளம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்கள்
குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கட்டளையகம், இது தொடர்பான காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

"நேற்று இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களானது, வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது" என கட்டளையகம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.