சர்வதேசத்தை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கை
சிரியாவில் ஈரான் தூதரகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அமெரிக்க உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிரியாவில் ஈரானின் துணைத் தூதரகம் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் பங்காளிகளாக கருதப்படும் ஹிஸ்புல்லா அல்லது ஹவுதிகள் இந்த தாக்குதலை முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பெரும் போர்
இன்னும் சில தினங்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதலானது உலகப் போருக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
களமிறங்கும் மேற்கத்திய நாடுகள்
மேலும், ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாடு நேச நாடுகளான ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியாவின் ஆதரவு கோரலாம் என நம்பப்படுகிறது.
மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானால் , மேற்கத்திய நாடுகளும் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 1ஆம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளன.
குறித்த தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |