பிரித்தானியாவில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழர் : நட்டஈடு வழங்க அரசு மறுப்பு
பிரித்தானியாவில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழர் ஒருவருக்கு நட்டஈடு வழங்க முடியாது என அந்நாட்டு தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு தபால் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
லண்டனின் புட்னி பகுதியில் செயற்பட்டு வந்த தபால் அலுவலக கிளையில் பணியாற்றிய 35 வயதான ஜெயகாந்தன் சிவசுப்ரமணியம் உயிரை மாய்த்துக் கொண்டார்.
பிரித்தானிய தபால் திணைக்களம்
இந்நிலையில் அவருக்கு நட்டஈடு வழங்க முடியாது என அவரின் மனைவிக்கு பிரித்தானிய தபால் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.

2005 ஆம் ஆண்டு பண இயந்திரம் மற்றும் பெட்டகத்திலிருந்து 179,000 பவுண்டுகள் காணாமல் போயுள்ளதாக தபால் அலுவலகம் குற்றம் சாட்டியது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அவர் உயிரை மாய்த்தார்.
எனினும் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த தவறு நேர்ந்ததாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri