அமெரிக்க சிறையில் வெடித்த கலவரம்: 41 பெண்கள் கொடூர கொலை - உலக செய்திகளின் தொகுப்பு
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் (Honduras) முக்கிய சிறை ஒன்றில் நேற்றைய தினம் (20.06.2023) ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிலரது சடலங்கள் மொத்தமாகக் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருவேறு குழுக்களுக்கு இடையே வெடித்த கலவரத்திலேயே பெண்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமராவில் உள்ள சிறைச்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு அதிகாரிகள் தரப்பு டசின் கணக்கான உடல்களை மீட்டுள்ளனர். சிலர் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,



