அமெரிக்க அரச ஊழியர்களுக்கு எலான் மஸ்க் விதித்த காலக்கெடு
அமெரிக்காவில் பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ. எனும் துறையை உருவாக்கியுள்ளதோடு அதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்கை(Elon Musk) நியமித்தார்.
அரச ஊழியர்களின் எண்ணிக்கை
இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 4,000 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தாமாக முன்வந்து பதவி விலகும் ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எலான் மஸ்க் எச்சரிக்கை
இந்நிலையில், சமூக வலைதளத்தில், அரசு ஊழியர்கள் தொடர்பாக ட்ரம்ப்(Donald Trump) 'பணியாளர்களைக் குறைக்கும் முயற்சிகளில் டி.ஓ.ஜி.இ., இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்' என கூறியிருந்தார்.
If any of the hundreds of employees who work for me refused to send a very short email with 5 bullet points and copying their manager, with 48hrs notice (!!) no less, they would no longer be employed. This is not controversial.
— Charlie Kirk (@charliekirk11) February 23, 2025
The unhinged reaction is proof the culture of the…
அதனை தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கடந்த வாரத்தில் என்ன வேலைகளை செய்தீர்கள் என்று அரசு ஊழியர்கள் மின்னஞ்சலில் விளக்கம் அளிக்க வேண்டும்.
பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் பதவி விலகியதாக கருதப்படுவர்' என்று பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரையும், தம்மதீபக் கோட்பாடும், தமிழர் பின்பற்றிய பௌத்தமும் 11 மணி நேரம் முன்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
