சர்ச்சையாகிய பாடல் வரிகள்! யொஹானிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
பாடகி யொஹானி நடத்திய நிகழ்ச்சியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை எதிர்த்து லண்டனில் உள்ள செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவின் மகளான யொஹானி பலமுறை அவரை “வீரன்” என புகழ்ந்துள்ளார். இவரது “Rawwath Dasin” எனும் பாடலில் இராணுவத் தளவாட உடை அணிந்து “நீங்கள் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடினீர்கள். நீங்கள் எனது வீரன், என பாராட்டி பாடியுள்ளார்.
2009 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் இராணுவ வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதில் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா தலைமையிலான 55ஆவது படைப்பிரிவு முக்கியப் பங்கு வகித்தது என ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்க தடை
ஜனவரி 29 முதல் பெப்ரவரி 4, 2009 வரை வன்னியில் உள்ள மருத்துவமனை தினமும் படையால் தாக்கப்பட்டதற்கு 55ஆவது படைப்பிரிவே பொறுப்பாக இருக்கலாம் என எதிர்பாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யொஹானி , அமெரிக்கா நுழையத் தடைசெய்யப்பட்ட ஷவேந்திர சில்வா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரோடு நட்புடன் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் யொஹானி தற்போது பல நிகழ்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 21) நடந்த நிகழ்ச்சிக்கு எதிராக நடைபெற்றுள்ளது.
ஒரு இனப்படுகொலையை ஆதரிப்பவரும், இனப்படுகொலை செய்பவர்களை புகழ்பவரும் எங்கும், குறிப்பாக லண்டனில், நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது,” என்று தமிழ் இளைஞர் அமைப்பான TYO UKவின் அரசியல் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
யொஹானியின் நிகழ்ச்சி
யொஹானி தனது தந்தையின் குற்றங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்க வேண்டும். இனப்படுகொலை செய்தவர்களை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று MSDTE ஒருங்கிணைப்பாளர் எஸ். யோகலிங்கம் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற Harley Lounge என்ற கட்டடம் தமிழருக்கு சொந்தமானது என ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.
மேலும், யொஹானியின் பின்னணி பற்றி முன்பே தெரியவில்லை என்றும், அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இல்லை என்றும் கட்டடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் யொஹானியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் “Outright Play” மற்றும் “Nesan Creations” எனும் நிறுவனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதில் “Nesan Creations என்பது தமிழர் ஒருவரின் நிறுவனம் என்றும் அவர் EROS இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவராக இருக்கிறார் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கூறியுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தையிட்டி விகாரையும், தம்மதீபக் கோட்பாடும், தமிழர் பின்பற்றிய பௌத்தமும் 12 மணி நேரம் முன்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
