விராட் கோலியின் சாதனையுடன் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
விராட் கோலியின்(Virat Kholi) சதத்துடன் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
9ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரொபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று(23) துபாயில் நடைபெற்றது.
இந்தியா- பாகிஸ்தான்
இந்தப் போட்டியில் இந்தியா(India) மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான்(Pakistan) அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
விராட் கோலியின் சாதனை
இதனையடுத்து 242 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 102 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இப்போட்டியில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 15 ஓட்டங்கள் அடித்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்து கோலி சாதனை படைத்துள்ளார்.
சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
இந்திய அணி
36 வயதான கோலி, 287 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை படைக்க சச்சின் 350 இன்னிங்ஸ்களிலும் சங்ககாரா378 இன்னிங்ஸ்களிலும் 14,000 ரன்களை கடந்தனர்.
இந்நிலையில், 242 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்கள் முடிவில் 244 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்தார்.
ஷ்ரேயஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் அரையிறுதி செல்வதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |