பதவி விலக தயாராகும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனில்(Ukraine) அமைதி ஏற்படும் என்றால் தனது பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) இன்று தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகலை, உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு பதிலாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை(Donald Trump) உக்ரைனுக்கு ஒரு கூட்டாளியாகவும், கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே ஒரு மத்தியஸ்தராக மட்டும் பார்க்க விரும்புவதாகவும் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
பதவி விலக தயார்
நாட்டில் போர் முடிவுக்கு வந்தால் அல்லது நேட்டோ உக்ரைனை உறுப்பினராக ஏற்றுக்கொள்ள அதுவே நிபந்தனையாக இருந்தால், தாம் பதவி விலகத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான(Russia) சாத்தியமான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது கீவ் வலுவான நிலையில் இருக்க,பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை "தேர்தல்களை நடத்தாத சர்வாதிகாரி என்று முத்திரை குத்தியதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
