அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
அண்மைக்காலமாக தூதரக அதிகாரிகளை போன்று போலி சமூக ஊடக கணக்குகள் அதிகளவில் உருவாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
சமூக ஊடக பயனாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு
அமெரிக்க தூதரகம்
அமெரிக்க தூதரகம் அல்லது அதன் பணியாளர்கள் பெயரில் செயல்படும் எந்தவொரு கணக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்பான தகவல்களைத் தேடி வரும் பலரை இலக்காகக் கொண்ட போலி கணக்குகள் வழியாக தவறான தகவல்களும், மோசடி நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
"நாங்கள் வழங்கும் உண்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற, போலிகளைத் தவிர்த்து நேரடியாக அதிகாரப்பூர்வ மூலத்தையே அணுகுங்கள்" என தூதரகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கீழ்கண்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சமூக ஊடக கணக்குகளையும் பயன்படுத்தலாம்:
ஜூலி சாங்
தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://lk.usembassy.gov
X (முன்னர் Twitter) – அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்: https://x.com/USAmbSL
@USAmbSL X – அமெரிக்க தூதரகம், இலங்கை: https://x.com/USAmbSL
@USEmbSL Instagram: https://www.instagram.com/usembsl/?hl=en
@USEmbSL Facebook: facebook.com/Colombo.USEmbassy
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வெறும் X தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கை பராமரிக்கிறார்.
முகநூல் Facebook, இன்ஸடாகிராம் Instagram, டெலிகிராம் Telegram போன்ற தளங்களில் அவரது பெயரில் இயங்கும் எந்தவொரு கணக்கும் தவறானவையாகும் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
