புலம்பெயர் தமிழர்கள் மீது அச்சத்தில் ஜனாதிபதி..! இராணுவத்தினரையும் புறக்கணித்ததாக விமல் குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புதிய நண்பர்களான கனேடிய புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியை பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை புறக்கணிக்க திட்டமிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தில் முதலில் கலந்துகொள்ளும் எண்ணம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கவில்லை. அவர் நிகழ்வுக்கு விருப்பம் இல்லாமலே வந்தார்.
இராணுவத்தினர்
நிகழ்வில் உரையாற்றிய அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக சிப்பாய் மற்றும் அதிகாரிகள் என்ற வார்த்தைகளை மட்டுமே அவர் பயன்படுத்தினார்.
புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி கொள்வார்கள் என்ற அச்சத்தில் தான் அவர் இராணுவத்தினர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
அத்துடன், தீவிரவாதி மற்றும் பிரிவினைவாதி போன்ற வார்த்தைகளையும் ஜனாதிபதி பயன்படுத்தவில்லை. அப்படியாயின், இராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போர் புரிந்தார்கள்?
தெற்கில் கலவரங்கள்
மேலும், போர் நடந்தது அமைதிக்காக என்ற வார்த்தையை ஜனாதிபதி பயன்படுத்தினார். அப்படியாயின் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமையும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அமைதிக்காக என்று ஜனாதிபதி கூறுகின்றார்.
இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் மீண்டும் கலவரங்கள் உருவாகி வருவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
தெற்கில் கலவரங்கள் உருவாகி வருவதாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனரா?, எனக்கு தெரிந்த வகையில் தெற்கு மக்களுக்கு கலவரத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: புலம்பெயர்தல் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் News Lankasri
