வெள்ளவத்தையில் இயந்திர துப்பாக்கியுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு
கொழும்பு, வெள்ளவத்தையில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்குள் பெண் ஒருவரால் டி56 ரக துப்பாக்கி எடுத்துச் சென்ற பெண்ணால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
ஹவலொக் வீதியிலுள்ள தொடர்மாடியில் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதற்றமான நிலைமை
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
67 வயதுடைய பெண் ஒருவர் தனது காரில் துப்பாக்கியுடன் கூடிய பையை வைப்பதனை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.
அவர் வழங்கிய இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த துப்பக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பொலிஸார் அந்த இடத்தை சோதனை செய்தபோது, வாகனத்தின் பின் இருக்கையில் இருந்த ஒரு பைக்குள் தங்க நிற துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
அந்த துப்பாக்கி உண்மையானதா என்பதை உறுதி செய்வதற்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
