ஹிஸ்புல்லாவின் தாக்குதலால் அமெரிக்கா அதிருப்தி: லெபனானுக்கு விரையும் முக்கிய அதிகாரி
இஸ்ரேலை இலக்கு வைத்துள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க பாதுகாப்பு படைகளின் தலைவர் சார்லஸ் சிக்யூ பிரவுன், லெபனானுக்கு விஜயமொன்றை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கெய்ரோவிற்கு விஜயம் செய்திருந்த சிக்யூ பிரவுன், இஸ்ரேலுக்குச் செல்வதற்கு முன், பிராந்திய மோதலை தடுப்பதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக லெபனான் செல்வார் என கூறப்படுகிறது.
ஈராக், சிரியா ஜோர்தான்
ஈராக், சிரியா மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகள் ஈரானின் கொள்கைகளுடன் நகர்வதோடு யேமனின் ஹவுதிக்கள் செங்கடலில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இது அமெரிக்க துருப்புக்களை மீண்டும் மத்தியகிழக்குக்கு அழைக்க வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானின் இராணுவம் என்ன திட்டங்களை வைத்திருந்தாலும், அதனை ஈரானின் அரசியல் தலைவர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று பிரவுன் லெபனான் விஜயத்தில் கூறியிருந்தார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காசா பகுதியில் தற்போது 11ஆவது மாதமாக நடந்து வரும் போரின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது எனவும் பிரவுன் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |