ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை
ஐக்கிய நாடுகள்(United Nations) மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்(Volker Turk) முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையானது இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியாகியிருந்தது.
பரந்த அதிகாரங்கள்
இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு தூதர்களுக்கு அரசாங்கம் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |