ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலிய நகர்வு: இராஜதந்திர முயற்சிக்கு தயாராகும் சர்வதேசம்
லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் பதற்றத்தை தணிக்க இராஜதந்திர முயற்சிகளைத் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் ஆதரவு குழுவின் உயர் தளபதி ஒருவர் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சொந்த தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியிருந்தது.
இதற்கு பதில் வழங்கும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலிய தரப்பு கூறியுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்
இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு, நேற்று அதிகாலை லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏறத்தாழ 200 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேல் மீதான குழுவின் தாக்குதல் நுணுக்கமாக முடிக்கப்பட்டது.
ஆனால் மேலும் தாக்குதல்கள் தொடரலாம். கடந்த மாதம் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில், ஈரான் ஆதரவுக் குழுவின் கோட்டையான மக்கள்தொகை நிறைந்த பகுதியில், உயர்மட்ட இராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இஸ்ரேலை நோக்கி தாக்குதல்களை நடத்தினோம்.
இஸ்ரேலிய பிரதமர், இலக்கு என்ன என்பதை தெளிவுபடுத்தாமல், “நாட்டின் மையத்தில் உள்ள ஒரு மூலோபாய இலக்கை நோக்கி ஹிஸ்புல்லா ஏவிய அனைத்து ட்ரோன்களையும்” இராணுவம் இடைமறித்ததாக கூறினார்" ஆனால் எங்களுடைய இலக்கு நிறைவேறியது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |