அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு! விளைவுகளை எதிர்நோக்கவுள்ள உலக நாடுகள்
நாயணம் உலகின் இருப்பு நாணயமாக அமெரிக்காவின் டொலர் இருப்பதால், அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு இழுபறி உலக நாடுகள் மத்தியில் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாட்டின் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கும், வேகமாக உயர்ந்து வரும் கடன்தொகையை குறைப்பதற்கும் அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளும் உடன்பாட்டுக்கு வரும் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன.
இரண்டு தரப்பு உறுப்பினர்கள்
ஜனநாயகக் கட்சியில் ஜகாதிபதி ஜோ பைடனுக்கும் குடியரசுக் கட்சி தரப்பில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் விளைவாக இந்த விடயத்தில் ஒரு அடிப்படை ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளான கீழ் அவை மற்றும் செனட் அவைக்கு செல்லத் தயாராக உள்ளது.
விளைவுகளை எதிர்நோக்கவுள்ள உலக நாடுகள்
இந்நிலையில் இரண்டு தரப்பு உறுப்பினர்களையும் உடன்பாடு கொள்ள வைத்து அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையிலான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு நிதியளிக்க அமெரிக்கா கடன் வாங்க வேண்டுமென்பதால் கடன் உச்ச வரம்பில் ஒரு உடன்பாடு ஏற்படாமல் விட்டால் ஜூன் 5 ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தின் நிதி கையிருப்பு முடிவடையும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த மந்தநிலை உலகெங்கும் உள்ள பல நாடுகளில் விளைவுகளை ஏற்படுத்துமென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
