தெற்கு சூடான் - மியான்மர் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை
தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு அந்தஸ்தை நீட்டிக்கக் கோரி குடியேற்றவாசிகளின் உரிமை அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை போஸ்டன் மற்றும் சிகாகோ நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.
நீதிமன்ற அனுமதி
உள்நாட்டுப் போர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிலவும் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கும், அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கும் இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி நீதிமன்றங்கள் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளன.
நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பின் காரணமாக தெற்கு சூடானைச் சேர்ந்த சுமார் 232 பிரஜைகளும், மியான்மரைச் சேர்ந்த சுமார் 4,000 பிரஜைகளும் தங்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam