ஈரானை அதிரடியாக தாக்கிய அமெரிக்கா.. தீவிரமடையும் போர் பதற்றம்!
புதிய இணைப்பு
ட்ரம்பின், ஈரான் மீதான அதிரடி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பை மிக தீவிரப்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது என்று ஈரானின் கோம் மாகாண செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "Fordow is gone" என்று ஒரு திறந்த மூல உளவுத்துறை கணக்கிலிருந்து ஒரு செய்தியை மீண்டும் வெளியிட்டுள்ளார்.
ஈரானின் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் உள்ளிட்ட மூன்று தளங்களை தாக்கியதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, தற்போது மேற்கண்ட பதிவை அவர் இட்டுள்ளார்.
இந்நிலையில், Fordow is gone என்பதன் மூலம் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை ட்ரம்ப் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) June 22, 2025
( Donald J. Trump - Jun 21, 2025, 8:04 PM ET ) pic.twitter.com/TlNgGt2QGh
முதலாம் இணைப்பு
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், ட்ரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.
மூன்று அணுசக்தி நிலையங்கள்
குறித்த பதவில், "ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது மிக வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
இப்போது அனைத்து விமானங்களும் ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகளின் மிக அழுத்தமாக வீசப்பட்டன.
எமது, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்புகின்றன. நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 41 நிமிடங்கள் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
