பிரேசிலில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த பலூன்! 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்
பிரேசிலின் பிர்யா கிராண்டே நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹாட் எயர் பலூன் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தப் பலூனில் மொத்தம் 21 பேர் பயணித்ததாகவும், இதில் பைலட் உட்பட 13 பேர் உயிர் தப்பியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலூனின் கூடையில் இருந்த மாற்று எரிவாயு தீப்பிடித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை அதிகாரிகள்
குறித்த விபத்தில் உயிர் தப்பியவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலூன் 1,000 மீட்டர் (3,280 அடி) உயரத்தை எட்டியதால், அதன் எதிர்பார்க்கப்பட்ட பறக்கும் நேரம் 45 நிமிடங்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பயணத்திற்கு ஒரு பயணிக்கு 550 ரியாஸ் (சுமார் $100) செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
