தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை
இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
விசாரணை
பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri