இலங்கை வந்தார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார்.
அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படைத் தளத்துக்குச் சென்றனர்.
கலந்துரையாடல்
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப் படையின் சி-130 விமானத்தை அவர்கள் பார்வையிட்டதுடன், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படையினருடன் கலந்துரையாடினர்.

இதையடுத்து அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் அரச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri