யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது.
திரும்பிச் சென்ற விமானம்
இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம் இன்றைய தினம் வியாழக்கிழமையும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிவாரண பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam