வர்த்தகப்போரின் மத்தியில் உடன்பாட்டை எட்டிய அமெரிக்கா- சீனா
சாத்தியமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், அமெரிக்காவும் சீனாவும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த வர்த்தகப் போரில் தளர்வு நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க திறைசேரியின் செயலாளரும் சீனாவின் உத்தியோகபூர்வ அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இறுதி ஒப்பந்தம்
ரிக்ரொக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகள் குறித்த இறுதி ஒப்பந்தம் மற்றும் சீனாவின் அரிய மண் தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான விடயங்களும் இதில் உள்ளடங்குவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீனா, இரண்டு நாடுகளும் அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
மலேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உச்சிமாநாட்டில்; ஒரு பகுதியாக பெசென்ட் மூத்த சீன வர்த்தக அதிகாரிகளைச் சந்தித்த நிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஸின்பிங் ஆகியோர் எதிர்வரும் வியாழக்கிழமை தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam