ட்ரம்பின் உத்தரவு தேவையில்லை.. கடும் சீற்றத்தில் நெதன்யாகு
காஸா அல்லது லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடு என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளால் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம், எங்கள் தலைவிதியை நாங்களே தொடர்ந்து தீர்மானிப்போம் என்றார்.
இதற்காக நாங்கள் யாருடைய ஒப்புதலையும் பெறப்போவதில்லை. எங்கள் பாதுகாப்பை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள்
ஆனால், காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு மட்டுமின்றி, இஸ்ரேலின் இதுவரையான அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் அமெரிக்கா தனது முழு ஆதரவையும் அளித்து வந்துள்ளது.

வளைகுடா நாடான கட்டார் மீதான இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுடன், இனி அவ்வாறு நடக்காது என்று மட்டும் அறிவித்தது.
ஆனால், கட்டார் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டித்ததுடன், பதிலடி உறுதி என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையிலேயே, இஸ்ரேலின் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் தேவை இல்லை என அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri