இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் மிலிந்த மொரகொடவிற்கு இடையில் பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் கார்செட்டோ மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மற்றும் அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான மூலோபாய பங்காளித்துவம் குறித்து அவர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.
ஆக்கபூர்வமான சந்திப்பு
மூலோபாய பங்காளிகளாக அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன.
இந்தநிலையில் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடன் தாம், ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வர்த்தகம், பாதுகாப்பு
மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றில் நமது நாடுகளின் உறவுகளை
மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்ததாகவும் கார்செட்டோ ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
