இந்திய - சீன எல்லையில் பதற்றம்! திபெத் எல்லையில் பெருமளவான சீன விமானங்கள் குவிப்பு
சர்ச்சைக்குரிய இந்திய - சீன எல்லை பிரச்சினை நீடித்துவரும் நிலையில், திபெத் எல்லையில் அதிகளவு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சீனா நிறுத்தி வைத்துள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில், 2020ல் அத்துமீறி சீனாவின் இராணுவம் நுழைந்த நிலையில் அன்று முதல் இந்திய - சீன எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தைகளின் பின்னர், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன், இரண்டு முக்கிய இடங்களில் படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.
இந்தியா - சீனா உறவில் பாதிப்பு
இதன் காரணமாக, இந்தியா - சீனா இடையேயான உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் கட்டுப்பாட்டில் உள்ள நம் நாட்டை ஒட்டியுள்ள திபெத்தில், சீன இராணுவம் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்திவைத்துள்ளது.
மேலும் திபெத்தின் இரண்டு விமானப் படை தளங்களில் சீனா, 40க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், 12க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
