தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இலங்கைக்கு அச்சுறுத்தலா..! வெளியான தகவல்
தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பான எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொடர்புகள் பிரிவை (117) தொடர்பு கொண்டு வினவிய போது, இது வரையில் குறித்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.
முதலாம் இணைப்பு
தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்றைய தினம் (19.05.2023) ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிராந்தியங்கள்
இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Fiji, Vanuatu மற்றும் New Caledoniaவிற்கு இடையே நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
