அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மானிப்பாய் வைத்தியசாலைக்கு விஜயம்
அமெரிக்காவின் (America) இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் (Julie Chung) யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தூதுவர் ஜூலி சங் (Julie Chung) யாழிற்கு (Jaffna) இன்று (15.05.2024) விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும் சென்று வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார்.
விசேட கலந்துரையாடல்
மேலும், வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளதுடன் தூதுவரின் விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றும் வளாகத்தில் நாட்டப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி எஸ்.சுரேந்திரகுமாரன், தென்னிந்திய திருச்சபையின் யாழ். மறைமாவட்ட ஆயர் வி.பத்மதயாளன், வைத்தியர்கள் ஊழியர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், 1848 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிசனரியை சேர்ந்த சாமுவேல் மிஸ் கிறீன் என்பவரால் இந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட
பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |