ஓமந்தையில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி
கோவிட் காலப்பகுதியில் ஏ9 வீதியின் வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது.
இராணுவ சோதனைச் சாவடி
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பல சோதனை சாவடிகள் அகற்றப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடி மாத்திரம் நான்கு வருடங்களாக அகற்றப்படாமல் நிரந்தர இராணுவ சோதனைச் சாவடியாக இயங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று (14) முதல் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
