வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த மோசமான நிலை
வவுனியா (Vavuniya) - தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (15.05.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட முகாமையாளரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
