கட்சி தாவ தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: புதிய உத்தியை பயன்படுத்தும் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்திற்கு கட்சி தாவ இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) புதிய உத்தியொன்றைப் பரீட்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம், அரசாங்கத்தினால் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27இன் பிரகாரம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
கண்டுபிடிப்பதற்கான முயற்சி
இவ்வாறான பட்டியல் வெளியிடப்படும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து மதுபான விற்பனை அனுமதிப்பத்திர்ங்களைப் பெற்றுள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்ள சஜித் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் தனது கட்சியில் இருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் பக்கம் தாவக் கூடியவர்களை இலகுவாகக் கண்டுபிடித்துக் கொள்வதற்கான முயற்சியையும் சஜித் பிரேமதாச முன்னெடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |