நினைவேந்தல் தொடர்பில் ரணிலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன் - செய்திகளின் தொகுப்பு
நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை ஏற்படுத்தித் தமிழர்களை ஏறி மிதித்தால் கோட்டாபயவின் நிலைதான் ரணிலுக்கும் (Ranil Wickremesinghe) ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன் (R. Sampanthan) எச்சரித்துள்ளார்.
இறுதிப் போரில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்தி வருகின்றார்கள்.
திருகோணமலை - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறிய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் இரவு வேளையில் பொலிஸாரால் அடாத்தான முறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று அம்பாறை மாவட்டம், கல்முனையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வுக்குப் பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |