சிரியாவில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவா் பலி
சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவா் உசாமா அல்-முகாஜிா் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் எம்.கியூ.-9 ஆளில்லா விமானமான ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளன. இது தொடா்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது,
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான அல்-முகாஜிரை தேடி அமெரிக்காவின் 3 எம்.கியூ.-9 ஆளில்லா விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை சிரியா வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
வழக்கமாக கிழக்கு சிரியாவில் இருந்து இயங்கி வந்த அல்-முகாஜிா், சம்பவம் நடந்த அன்று வடமேற்கு சிரியாவின் அலெப்போ பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தாா்.
ஆளில்லா விமானங்கள் மூலம் அவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவா் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், ஒருவா் காயமடைந்திருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய நாட்களில் ஆயுதங்களின்றி பறந்த ஆளில்லா விமானங்கள், அல்-முகாஜிா் மீது தாக்குதல் நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை மட்டுமே ஆயுதங்களுடன் பறந்தன.
சிரியா பிராந்தியத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிக்க அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்பதை இந்தத் தாக்குதல் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
கடந்த புதன்கிழமை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிரான பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவின் எம்.கியூ.-9 ஆளில்லா விமானங்கள் மீது பாதுகாப்பற்ற மற்றும் தொழில்முறையற்ற நடத்தையை ரஷ்ய விமானங்கள் பின்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
‘வியாழக்கிழமை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களுக்கு அருகே நெருங்கி பயணிப்பது என ஒரு மணி நேரம் வரை ரஷியாவின் எஸ்யூ-34 மற்றும் எஸ்யூ-35 விமானங்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்துகொண்டன.
மேற்கு சிரியா வான்பகுதியில் வெள்ளிக்கிழமை பறந்து கொண்டிருந்த அமெரிக்க ஆளில்லா விமானங்களை 2 மணி நேரமாகப் பின்தொடா்ந்து வந்த ரஷிய விமானங்கள் 18 முறை அச்சுறுத்தும் விதமாக இயங்கின’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பதில்
இதுகுறித்து சிரியாவுக்கான ரஷ்ய நல்லிணக்க மையத்தின் தலைவா் ரியா் அடெம் ஒலெக் குரினோவ் கூறுகையில்,
‘வடக்கு சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் ஆளில்லா விமானங்கள் பறப்பது குறித்து ரஷியா கவலைப்படுகிறது.
இரு ராணுவத்தினரிடையே மோதல்களைத் தவிா்ப்பதற்கு ஆளில்லா விமானங்கள் மீது நெறிமுறைகளின்படியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
