நடுவானில் அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று நள்ளிரவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் அமெரிக்க நேரப்படி இன்று(16.06.2026) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (Stratofortress) ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
8 பேர் உயிரிழப்பு
இதன்போது, 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம், B-52 என்பது 1950 கள் முதல் அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும்.

அத்துடன், 8,800 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
வியட்நாம், வளைகுடாப் பகுதி, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் மிகச் சமீபத்தில் ஈரான் ஆகிய இடங்களில் நடந்த மோதல்கள் உட்பட பல இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்த ரக குண்டுவீச்சு விமானத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.