உறுமய திட்டத்தால் மக்களின் சொத்துப் பெறுமதி உயர்ந்துள்ளது: ரணில் நெகிழ்ச்சி

Mannar Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Ashik Jun 16, 2024 01:35 PM GMT
Report

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (16.06.2024) இடம்பெற்ற மன்னார் (Mannar) மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

"கோவிட் தொற்று, பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி உறுமய திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும்.

மன்னாரில் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் ஆயரை சந்தித்த ரணில்

மன்னாரில் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் ஆயரை சந்தித்த ரணில்

காணி உரிமம்  

கடந்த முறை வடக்கிற்கு வந்தபோது மன்னாருக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. மாத இறுத்திக்குள் வருவதாக சொன்னேன். இன்று வந்துவிட்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அபிவிருத்தி தொடர்பில் கூறிய பிரச்சினைகள் குறித்து ஆராய்வோம்.

உறுமய திட்டத்தால் மக்களின் சொத்துப் பெறுமதி உயர்ந்துள்ளது: ரணில் நெகிழ்ச்சி | Urumaya Project In Mannar Ranil Speech

இங்கு வவுனியா மற்றும் மன்னார் மக்கள் வந்துள்ளனர். அவர்கள் வரும்போது காணி உரிமை இருக்கவில்லை. ஆனால், இங்கிருந்து செல்லும்போது உரிமையுடன் செல்வார்கள். 

இந்த காணிகளை இனி உங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம். வடக்கில் 90 ஆயிரம் உறுதிகள் வழங்க வேண்டியுள்ளன. அவற்றில் 40 ஆயிரம் உறுதிகள் எந்த பிரச்சினைகளும் இல்லாதவையாகும். எனவே, கிராமங்களுக்கே சென்று அதற்குரிய பணிகளை செய்யுமாறு ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், 1935ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையில் காணி அனுமதி பத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகுமாறு ராஜிதவிடம் கோரிய ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகுமாறு ராஜிதவிடம் கோரிய ரணில்

பொருளாதார நெருக்கடி 

இந்நிலையில், அவற்றை எந்த நேரத்திலும் இரத்துச் செய்ய முடியும் என்பதால், காணி உறுதி குறித்து மக்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. காணியை சுத்தம் செய்து அதற்குள் விளைச்சல் செய்து அபிவிருத்தி செய்த பின்பும் அதற்கான உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.

உறுமய திட்டத்தால் மக்களின் சொத்துப் பெறுமதி உயர்ந்துள்ளது: ரணில் நெகிழ்ச்சி | Urumaya Project In Mannar Ranil Speech

சிலர் 85 வருடங்களாக இந்நிலையில் இருந்தனர். 20 இலட்சம் பேர் இப்படியாக உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அதனை மாற்றியமைக்க வேண்டுமென நான் தீர்மானித்தேன். கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அதேவேளை, ஒட்டுமொத்தமாக சொத்துக்களையும் இழந்தனர். சொத்துப் பெறுமதி வீழ்ச்சி கண்டது. நாம் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும்போது அதன் நன்மைகளை சாதாரண மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த வேலைத்திட்டத்திற்கு முன்பாக கொவிட், பொருளாதார நெருக்கடி காரணமாக இழக்கப்பட்டட சொத்துப் பெறுமதி உறுமய திட்டத்தினால் மீண்டும் வலுவடையும். ஆசியாவில் எந்தவொரு நாடும் காணி உறுதிகளை மக்களுக்கு வழங்கவில்லை.

இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!

இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு யார் பொறுப்பு கூறுவர்!

 நிரந்த உரிமை

அதனால், நாம் பெரும் புரட்சி செய்திருக்கிறோம். மேல் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டு உரிமைகளை வழங்கியுள்ளோம்.

உறுமய திட்டத்தால் மக்களின் சொத்துப் பெறுமதி உயர்ந்துள்ளது: ரணில் நெகிழ்ச்சி | Urumaya Project In Mannar Ranil Speech

சாதாரண மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு நியாயம் கொடுத்திருக்கிறோம். காணி உறுதிகளின் பெறுமதிகளை வடக்கு மக்களே அதிகமாக அறிவர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் புலிகளால் அபகரிக்கப்பட்டன.

இராணுவ முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டன. தற்போது மக்களுக்கு காணிகளுக்கான நிரந்த உரிமை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ கூடிய சூழல் உருவாகும்.

உங்களுக்கு கிடைத்த காணிகளை விற்றுவிடாமல். அபிவிருத்தி செய்து இதிலிருந்து நல்ல பயன்களைப் பெறுமாறு கூறி வாழ்த்துகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். 

தடைகாலம் முடிந்து தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

தடைகாலம் முடிந்து தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US