வெளிநாடொன்றிலிருந்து பிரித்தானியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தல்
லெபனானில்(Lebanon) தங்கியிருக்கும் பிரித்தானிய நாட்டு மக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் (Israel) நாட்டுடனான மோதல் எந்நேரமும் மோசமடையலாம் என்பதால், லெபனான் நாட்டிலிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஈரான் தலைநகரிலும், லெபனான் தலைநகரிலும் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்கள்! இரண்டு அமைப்புக்களின் தலைவர்கள் படுகொலை
வான்வழித் தாக்குதல்
இது தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான டேவிட் லாம்மி (David Lammy) தெரிவிக்கையில், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருவதாகவும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்குமாறு வெளியுறவு அலுவலக தூதரகக் குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த பதற்றம் மேலும் அதிகரிக்குமானால், லெபனானிலிருக்கும் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பில் பிரித்தானிய அரசு உறுதியளிக்கமுடியாது.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆகவே, லெபனானிலிருக்கும் பிரித்தானியர்களுக்கு என்னுடைய செய்தி ஒன்றுதான், உடனடியாக வெளியேறுங்கள் என டேவிட் லாம்மி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
