ஈரான் தலைநகரிலும், லெபனான் தலைநகரிலும் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்கள்! இரண்டு அமைப்புக்களின் தலைவர்கள் படுகொலை
ஹமாசின் முக்கிய தலைவரான Ismail Haniyeh கொல்லப்பட்ட சம்பவம், மத்தியகிழக்கில் மிகப் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதைக் கடந்து அவர் ஈரானின் தலைநகர் டெகரானில் வைத்துப் படுகொலைசெய்யப்பட்டார் என்பது, உண்மையிலேயே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதான ஒரு சம்பவம் என்பதில் சந்தேகம் இல்லை.
ஈரான் தலைநகர் டெகரானில் மீது தாக்குதல் இடம்பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இஸ்ரேல் ஒரு விமாணத் தாக்குதலை தேற்கொண்டிருந்தது.
ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டத்தலைவர் Fuad Shukrஐக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலில், மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 74பேர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்ந்து மத்தியக் கிழக்கில் மிகப் பெரிய போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த இரண்டு தாக்குதலகள் பற்றிம், டெகரானில் கொல்லப்பட்ட ஹமாசின் தலைவரது பின்னணி பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |