துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பு விவகாரம்! முடிவை மாற்றியமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கான முடிவை மாற்றியமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவரை விடுவிக்க ஜனாதிபதி தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்பதால் இந்த முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
2011 இல் இடம்பெற்ற துமிந்த சில்வா தொடர்புடைய கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் விடயம் இங்கு கவனிக்கப்பட வேண்டும். இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பை மாற்றியமைப்பது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலாகும் என்று மத்தும பண்டார கூறி உள்ளார்.
இதற்கிடையில், முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு என்பது ஒரு கோபம் கொள்ள வேண்டிய பிரச்னை அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இது ஒரு வர்க்க பிரச்சினையாகும், ஏனெனில் இது உயர் வர்க்க மக்களுக்கு நீதி வழங்கப்படுவதையும் குறைந்த வர்க்க மக்களுக்கு இந்த நீதி வேறுபட்டது என்பதையும் இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும்
மற்றவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
