ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்களின் குரல் (Video)

Colombo Malaysia Singapore Canada
By Mayuri Nov 10, 2022 08:23 PM GMT
Report

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணம்


இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்களின் குரல் (Video) | Urgent Warning For Those Trying To Enter Canada

அத்துடன், படகில் ஏறுவதற்கு முன் சட்டவிரோத பயணத்திற்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு பல இலட்சம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, அகதிகள் அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்களின் குரல் (Video) | Urgent Warning For Those Trying To Enter Canada

இவ்வாறானதொரு சூழலில் மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறதாக வியாட்நாமிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தொலைபேசி உரையாடலொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கவனத்தை ஈர்த்துள்ள ஒலிப்பதிவு

அதில் சட்டவிரோதமாக பயணித்த நிலையில் மீட்கப்பட்ட நபரொருவரின் உறவினர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் (சட்டவிரோதமாக பயணத்தை மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர்) நபரொருவருடன் உரையாடும் ஒலிப்பதிவே இவ்வாறு வெளியாகியுள்ளது.

ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்களின் குரல் (Video) | Urgent Warning For Those Trying To Enter Canada

அதில் பாதிக்கப்படவரின் உறவினரொருவர் தனது சகோதரன் தொடர்பில் மிகவும் பதற்றமாக வினவுகின்றார். அடுத்த கட்டம் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியும் அவர் கேள்வியெழுப்புகிறார்.

என்ற போதும் எதிர்த்தரப்பில் பதிலளிப்பவர் மிகவும் சாதாரணமாக, கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள் அமெரிக்காவிற்கு செல்வார்கள் என கூறுகிறார். அத்துடன் பாதிக்கப்பட்டவரின் உறவினர் கேட்கும் கேள்விகளுக்கு சமாளிக்கும் வகையில் பதில் தெரிவிக்கிறார்.

இந்த குரல்பதிவானது சமூக வலைத்தளங்களை சேர்ந்த பலரையும் கொதித்தெழ வைத்திருக்கிறது. இவ்வாறான கடத்தல்காரரர்கள் பணத்தை பெற்றுக் கொள்வதை மட்டுமே நோக்கமாக வைத்துள்ளார்கள்.

ஆபத்தான பயணத்தின் போது கடலில் சிக்கிய 303 இலங்கையர்கள்! பதறும் உறவினர்களின் குரல் (Video) | Urgent Warning For Those Trying To Enter Canada

எனினும் பணத்தை கொடுத்து விட்டு அடுத்த நொடி நிச்சயமில்லாத நிலையில் ஆபத்தை கடக்க வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். எனவே இவ்வாறான ஆட்கடத்தல்காரர்களை நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US