அரசுக்கு1.4 பில்லியன் இழப்பு: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்
தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியதன் காரணமாக அரசுக்கு ரூ.1.4 பில்லியன் (சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்) நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி நோக்கிலான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிலக்கரியின் தரம்
நிலக்கரியின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் அரசுக்கு மேலதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாற்று மின்சார உற்பத்தி முறைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் நேரடியாக சுமார் ரூ.800 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிலைமை காரணமாக மேலும் ரூ.400 மில்லியன் முதல் ரூ.600 மில்லியன் வரையிலான நட்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசாங்கத்தின் மின்சாரக் கட்டணக் கொள்கையையும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விமர்சித்தார். தற்போதைய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், தற்போது மின்சாரக் கட்டணம் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு மின்சார அலகுக்கான கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.35 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலதிக நிதிச்சுமை
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவான (LNG) மூலம் ரூ.20 செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறப்படுவதையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.
தற்போது மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக டீசல் எரிபொருளில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றம் மின்சார உற்பத்தியின் செயல்திறன் மற்றும் செலவுத் திறன் தொடர்பிலும் கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு கணிசமான வருமானம் கிடைத்து வருவதால், 2024ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதம் குறைப்பதற்கான நிதி அரசாங்கத்திடம் இருப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஏற்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகளின் காரணமாக, இந்த நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கும் வர்த்தகத் துறையினருக்கும் தற்போதைய உயர்ந்த மின்சாரக் கட்டணங்கள் நீடிக்க முடியாத சுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri